தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மூக்குபீறி சாலையில் ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதன் அருகே அவ்வூரைச் சேர்ந்த சின்னத்துரை மகன் செல்வ திரவியம் என்ற கூலித் தொழிலாளி இன்று இரவு நான்கு சந்தி வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அங்கு வந்து அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. முகத்தை கொடூரமாக சிதைத்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.