விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொண்ணங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு பதவிக்கு நேற்று 13 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.சற்குணம் என்பவர் ஏலம் எடுத்துள்ளார். ஏற்கனவே எழுந்த சர்ச்சையில் பொண்ணங்குப்பம் ஊராட்சி துத்திப்பட்டு மதுரா பகுதியில் மக்கள் எடுத்ததாக பொண்ணகுப்பம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு சர்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் இன்று இரவு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி 20 லட்சத்து எட்டாயிரத்துக்கு துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது :
துத்திப்பட்டு ஊர் எல்லையில் உள்ள பெருமாள் கோயில் உள்ள குளக்கரையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் சம்பவ இடத்தில் நேரில் சென்று விசாரணை செய்த பின்பும் தொடர்ந்து இச்செயல் நடந்திருப்பது பொண்ணங்குப்பம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












