கோவை சிங்காநல்லூர்
அருகேயுள்ள எஸ்.ஐ.எச். எஸ் காலனியை சேர்ந்த 38 வயதான பெண் விபசார புரோக்கராக உள் ளார். இவர் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்தார். அப்போது இவரது வீட்டில் 30 வயது விபசார பெண்ணும், 27 வயது வாலிபரும் இருந்தனர். வீட்டில் இவர்கள் 3 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது விபசார புரோக்கருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள். எங்களுக்கு ஜாலியாக இருக்க இளம்பெண் தேவை, உங்களின் செல் போன் எண்ணை என நண் பர் ஒருவர் கொடுத்தார். நாங்கள் உங்கள் இடத்திற்கு வரலாமா? நீங்கள் கேட்ட பணத்தைதரநாங்கள் தயா ராக இருக்கிறோம்” என்ற னர் இதைத்தொடர்ந்து புரோக்கர் பெண் தனது வீட்டின் முகவரியை தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் முகத்தை துணியால் மூடிய 4 பேர் வீட்டிற்குள் புகுந்தனர். யார் நீங்கள்? ஏன் இப்படி வருகிறீர்கள்? என புரோக்கரும், வீட்டில் இருந்தவர்களும் கேட்ட னர். அப்போது அவர் கள் பெண்களை வெச்சு பணத்தை குவிக்கிறாயா?. நகை, பணத்தை தராவிட் டால் விடமாட்டோம். எனக்கூறி திடீர் தாக்குதல் நடத்தினர். புரோக்கரும், மற்ற இருவரும் எங்களிடம் பணம் நகை எதுவுமில்லை எனக்கூறினர் ஆனால் அவர்கள் கேட்காமல் வீட்டில் இருந்த பீரோ, பெட்டி போன்றவற்றை தேடினர். பின்னர் இவர் கள் புரோக்கர் பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த கம்மல், செயின் போன்ற வற்றை பறித்தனர்.
நகையை அவர் தர மறுத்து அடம் பிடித்த 8 போது அவர்கள் அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்
கினர். மிரட்டி 12 பவுன் தங்கநகைகளை பறித்தனர். நகைகளை பறித்தபோது தடுக்க வந்த வாலிபர் மற் றும் இளம்பெண்ணையும் தாக்கினர். இது தொடர் பாக துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசா ரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் ஆர். எஸ்.புரம் நியூ ஸ்கீம் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (26). சின்னவேடம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (26), தெலுங்குபாளையம். பகுதியை சேர்ந்த அசோக் குமார் (28) ஆகியோரை செய்த போலீசார் கைது செய்த னர்.இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கும் பல் ஏற்கனவே கோவை நகரில் சில இடங்களில் தங்க நகையை மிரட்டி பறித்து இருப்பதாக தெரி கிறது.இந்தகும்பல் பறித்து சென்ற தங்க நகைகள் மீட் கப்படவில்லை இந்த கும்ப லின் தலைவர் உட்பட 4 பேரை தனிப்படை போலீ சார் தேடி வருகின்றனர்.