தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வனச்சரகத்திற்கு உட்பட்ட புளியங்குடி டி என் புதுக்குடி ஃபீட் வனப்பகுதியின் எல்லைப் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் பட்டா நிலம் உள்ளது. இங்கு மா, எலுமிச்சை, தென்னை பயிரிட்டுள்ளனர் . வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் காட்டு எருமை, காட்டுப்பன்றி, உள்ளிட்ட விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கம் .
இந்நிலையில் சில நேரங்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அந்த பகுதியை கண்காணித்த போது வேட்டை நாய்களை வைத்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டியன் , கருப்பசாமி , ராம்குமார் , மணிகண்டன் , குருசாமி ஆகிய 5 பேரை கைது செய்தனர் . அவர்களிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடியதை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஒருவருக்கு தலா 30 ஆயிரம் வீதம் 5 நபர்களுக்கு சேர்த்து 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்த கத்தி அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் .














