சர்க்கரை ஆலை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

0
505


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தனியார் சர்க்கரை ஆலை கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு தொழில் நுட்ப வல்லுனர்கள் , ஊழியர்கள் என 500 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர் .

இவர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் 18 மாதங்களாக வருங்கால வைப்பு நிதி (PF) செலுத்தவில்லை , இரண்டு வருடங்களாக போனஸ் தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரிகிறது.

உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரணி சர்க்கரை ஆலை நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் ஆலையின் உள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் எட்டப்படாததால் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here