தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் செல்போன் கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை – மகனான, ஜெயராஜ் மற்றும்பெனிக்ஸை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையான தாக்கியதில் முதலில் மகன் இரண்டாவது தந்தை என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இந்த கொடூர வழக்கு கடந்த 5 வருடமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் கைதான முன்னாள் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.










