நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள மத்திய பீடித்தொழிலாளர்கள் மருத்துவமனையில் ஒரு பகுதி மட்டுமே செயல்பட்டு வந்தது. மற்றப்பகுதிகள் பயன்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு பராமரிப்பு இன்றி கிடந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்175 படுக்கைகள் கொண்ட கொரோனா பாதித்தவர்கள் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தார். மேலும், மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் , சிகிச்சை உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார் .
இங்கு தேவையான மருத்துவர்கள் , செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஜன் செறிவூட்டல் எந்திரம் மூலம் ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களுக்கு எளிமையாக மூச்சு பயிற்சி அளிக்கும் வகையில் யோகாசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அமைச்சர் முன்னிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் யோகா முறைகளை செய்து காட்டினர் .

கூடன்குளம் , முனைஞ்சிப்பட்டி, திசையன்விளை , பணகுடி பகுதிகளிலும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் , தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன் , மாவட்ட ஆட்சியர் வி’ஷ்ணு , சார் ஆட்சியர் பிரதிக்தயாள், மற்றும் மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .













