தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தல்

0
1665

தூத்துக்குடி ஜெயலானி தெருவில் உள்ள ரேஷன் கடையில் இருந்து இன்று காலை 150 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லெனின் பாலாஜி என்பவர் சிக்கினார். குடிமை பொருள் தடுப்பு பிரிவு வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையிலான பறக்கும் படையினர் லெனின் பாலாஜியிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றினர்.
சில நாட்களுக்கு முன்பு அருகில் உள்ள புதுக்கிராமம் பகுதியில் இதுபோல் அரிசி கடத்தியவரை குடிமை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்தனர்.
இவ்வாறு தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்துவதும், சில இடங்களில் பொதுமக்கள் அதை பிடிப்பதும் தொடர்ந்து நடந்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here