காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் மறைக்கப்பட்ட 16 சிலைகள்

0
920

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆவணங்களில் பதிவின்றி 16 உற்சவர் சிலைகள் கோவில் கருவூல அறையில் இருப்பதை இந்து அறநிலைத்துறையின் ஆய்வில் கண்டெடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் குறிப்பிட்ட நகைகளை பாதுகாக்கும் தனியறையில் விநாயகர், லக் ஷ்மி, நாயன்மார்கள்,உட்பட, 16 சிலைகள் இருப்பது தெரிந்தது.

கோவிலில் நகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் அந்த அறையில் இத்தனை ஆண்டுகளாக 16 உற்சவர் சிலைகள் ஏன் இருந்தன இதுவரை இந்த 16 சிலைகள் குறித்து தற்போது வரை கோவில் ஆவணங்களில் பதிவு செய்யாதது ஏன் என்ற கேள்வியாடது அதிகாரிகளிடையே எழுந்துள்ளது. மேலும் கண்டெடுக்கப்பட்ட சிலைகள், எத்தனை பழமையானவை, என்ன மாதிரியான உலோகத்தால் செய்யப்பட்டவை என்பது கண்டறியமுடியவில்லை.மேலும் குறிப்பாக இந்த 16 சிலைகள் குறித்து கோவில் ஆவணங்களில் இல்லாத காரணத்தால் அவை கடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் எனவே கண்டெடுக்கப்பட்ட சிலைகளை முறையாக ஆவணப்படுத்த வேண்டுமெனும் கோரிக்கையானது பக்தர்களிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து சோமாஸ்கந்தர் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் கடத்தப்பட்டு தற்போது வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கேட்டபோது

கண்டெடுக்கப்பட்ட 16 உற்சவர் சிலைகளின் தன்மை குறித்து விரைவில் ஆய்வு செய்து அவை வெண்கலமா, தங்கமா என ஆய்வுக்குழுவினர் ஆய்வு நடத்திய பிறகே தெரியவரும் எனவும் ஊரடங்கு காரணமாக ஆய்வு பணி சற்று தாமதமாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here