குற்றாலம் மெயின் அருவியில் சற்றுமுன் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அருவியில் குளித்துக்கொண்டிருந்த 5 பேர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.
தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர், ஆகாஷ், எஸ்பி ஆர்.கிருஷ்ணராஜ் அருவிப்பகுதிக்கு விரைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை பலியான சென்னை பெரம்பூர் மற்றும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பெண்கள் உடல் மீட்கப்பட்டுள்ளது மேலும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குற்றாலத்தில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.