மாநிலத்தில் முதலாவதாக நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளை பராமரிக்க மையம்

0
1233

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் பெற்றோர்களின், தொற்று பாதிக்கப்படாத குழந்தைகளை பராமரிக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக இதுபோன்ற குழந்தைகளை பராமரிக்கும் மையம், நெல்லை சந்திப்பில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் காப்பகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு தற்போது ஆலை இயங்க தொடங்கியுள்ளது. ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு ஏற்ப வெப்ப நிலையை உயர்த்த வேண்டிய பணி நடைபெற்று வருகிறது மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் ரூர்கேலாவில் இருந்து ஐந்து டிரக்குகளில் தூத்துக்குடிக்கு ஆக்சிசன் வருகிறது அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here