ரூ.29 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்

0
1360

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உச்சத்தில் காணப்படுகிறது. இடைவெளி எதுவும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை அதிகளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை கடந்த நிலையில், அதன் பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்ததால், கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை தொட்டது. இந்த நிலையில் நேற்றும் விலை அதிகரித்தது

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.21-ம் பவுனுக்கு ரூ.168-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 603-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 824-க்கும் விற்பனை ஆனது. விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இன்றோ (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையோ(புதன்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தை நெருங்கி விடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here