கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்க்கான செலவை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி நெல்லை வண்ணாரப்பேட்டையில் காங்கிரசார் கண்ணைக்கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், தமிழகத்திற்கு உயிர்காக்கும் ஆக்சிஜன் தடுப்பு மருந்துகளை கூடுதலாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.









