இந்தியாவில் மூடப்படும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

0
1117

கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் 36 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இங்கு பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சம். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்யாமல் இருந்த நிறுவனங்களை செயல்படாத நிறுவனங்களாகக் கருதி, அவற்றின் பதிவு ரத்து செய்யப்பட்டது.
இதன்படி, மஹாராஷ்டிரா, டில்லி ஆகிய இடங்களில் முறையே, 1.42 லட்சம், 1.26 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் மூடப்பட்ட நிறுவனங்கள் எண்ணிக்கை 2016 _ 17ல், 24 சதவீதமாக இருந்தது. இது 2019 மே மாதத்தில் இது 44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here