தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய விருது

0
1514

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத்தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ஆசிரியர் மன்சூர் அலி, கரூர் செல்வகண்ணன் ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

வரும் செப்.,5-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், அவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் விருதை வழங்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here