மனைவி பிரிந்த வருத்தத்தில் தொழிலாளி தற்கொலை

0
658

ராஜாக்கமங்கலம் அண்ணா காலனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜேந்திரனை பிரிந்து அவரது மனைவி தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ராஜேந்திரன் மன வேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார். வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து தனது வீட்டின் அருகே உள்ள சுயம்புலிங்கம் என்பவர் வீட்டிற்கு சென்றார். அங்கும் வீடு பூட்டப்பட்டு கிடந்தது.

இதையடுத்து அவர் அந்த வீட்டின் பின்பக்கம் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here