மும்பையிலிருந்து சென்னைக்கு 1.2 லட்சம் டோஸ் கோவாக்சின்

0
1208

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த,பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.ஆனால் மத்திய அரசு தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை தமிழகத்திற்கு ஒதுக்காததால்,தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசு,மத்திய அரசை வலியுறுத்திவருகிறது.

இந்நிலையில் மும்பையில் உள்ள மத்திய மருந்து தொகுப்பு கிடங்கிலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை இன்று தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது. அந்த தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொண்டு,இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் இன்று மதியம் சென்னை விமானநிலையம் வந்தது.10 பாா்சல்களில் வந்த 290 கிலோ எடையுடைய அந்த 1.2 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை பழைய விமானநிலையத்தில் பெற்றுக்கொண்டனா்.

அதன்பின்பு குளிா்சாதன வசதியுடைய வாகனத்தில் ஏற்றப்பட்டு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் உள்ள மருந்து பாதுகாப்பு வைப்பு அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.நாளை இந்த தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here