பாளை சிறையில் அடித்துக்கொன்ற கைதி உடலை பெற மறுத்து 12ஆவது நாளாக போராட்டம்

0
763

பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 12ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
கொலை தொடர்பாக 12 பிரிவுகளின் கீழ்பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 கைதிகளை கைது செய்தனர். பாளை சிறை துணை ஜெயிலர் , உதவி ஜெயிலர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் .

அவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முத்துமனோவின் உறவினர்கள் , பகுதி பொதுமக்கள் கோருகின்றனர்.

இந்நிலையில், இன்று சேரன்மகாதேவி கோட்டாட்சியர் பிரதிக்தயாள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வாகைக்குளத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உடலை வாங்கிக்கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர் . மக்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள், அரசுக்கு தெரியப்படுத்துவதாக கூறிச்சென்றனர். தெரிவித்துள்ளனர் .

இதற்கிடையே, நாளை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தபோவதாக வாகைக்குளம் மக்கள் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here