நெல்லை மாநகர் மேலப்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் பிரேமச்சந்திரன். இவர் மருத்துவம் தவிர பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, தன்னுடைய சொந்த கிராமத்தில் தன் செலவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகிறார். நெல்லை மாநகரில் மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சிறந்த பாடகரான இவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். இன்முகத்துடன் நோயாளிகளுடன் பழகுவதால் மக்கள் மருத்துவராக திகழ்ந்து வருகிறார்.

இவரைப் பற்றி பிரபல ஆவணப்பட இயக்குனர் சுபாஷ் காலியான், ‘ ஒரு மருத்துவரின் மனிதநேய பயணம்’ என்ற பெயரில் ஆவணப் படம் எடுத்துள்ளார்.
இந்த ஆவணப் படத்திற்கு நார்வேயில் நடக்கின்ற உலக தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி அவார்டு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுவதற்காக அவர் வரும் 25ஆம் தேதி நார்வே புறப்படுகிறார்.













