கொரோனா ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு நெல்லை மாநகர காவல்துறை நூதன தண்டனை வழங்கி வருகிறது.
நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு மேல் தேவையின்றி சுற்றித் திரிபவர்களை கட்டுப்படுத்த நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் உத்தரவின்பேரில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் வைத்திருக்கும், தகுந்த காரணம் கூறும் நபர்களை மட்டுமே சோதனை சாவடிகளை கடந்து செல்ல காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வருவோரை சோதனைச்சாவடி அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிற்கவைக்கின்றனர். பின்னர் அவர்களை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்து அபராதமும் விதிக்கின்றனர். தொடர்ந்து இதே போல் தேவையின்றி வெளியே சுற்றக் கூடாது என எச்சரித்து அனுப்புகின்றனர் .









