அனல்மின் மயமாகும் தேரிக்காடு- உடன்குடி பஜாருக்குள் அடைக்கலம் புகுந்த மிளா

0
1015

மனித சமுதாயம் சகட்டுமேனிக்கு காடுகளை அழிக்க, விலங்கினங்கள் அகதிகளாகும் இயற்கை அநீதி இழைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

நெல்லை தாழையூத்து பகுதி ஒரு காலத்தில் மான்களின் சிமெண்ட் ஆளை வந்த பின்பு அங்கும் இங்கும் கதிகலங்கி அலைந்து, முக்கால் வாசிக்கு மேல் மடிந்தும் விட்டன.

அதுபோல்தான் உடன்குடி அனல்மின் நிலையம் அமையவிருக்கும் பகுதியில் மான் வகையை சேர்ந்த மிளா சிறிய எண்ணிக்கையில் வசித்து வந்தன.

தற்போது அனல் மின்நிலைய பணிகள் நடைபெற்று வருவதால் அவை புகலிடம் இன்றி தவிக்கின்றன. அங்கிருந்த மிளாக்களில் ஒன்று இன்று வழிதவறி உடன்குடி கீழபஜாரில் உள்ள ஒரு காம்ப்ளக்சுக்குள் வந்துவிட்டது.

இது குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here