தம்ழிநாடு சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பதிய மக்கள் தயாராகிவிட்டனர். இந்நிலையில், பல்வேறு கட்சிகளின் விளம்பரங்களால் என்ன பலன் விளைந்துள்ளது என கணிக்கவேண்டியுள்ளது.
திமுகவும், அதிமுகவும் வெளியிட்ட கட்சி தேர்தல் பாடலான ’வெற்றி நடை போடும் தமிழகமே’, ’ஸ்டாலின் தான் வாராரு’ பாடல்களை உல்டா செய்து ஒன்றையொன்று நக்கல் செய்துள்ளது. அதில், திமுக விளம்பரம் சுருக்கென்று சுருக்கமாக இருக்கிறது. அதிமுக விளம்பரம் சற்று விரிவாக விவரமாக இருக்கிறது.
திமுக விளம்பரத்தில் வசை சொற்கள் இருப்பது நச்சென்று இருந்தாலும் நாகரீகமா என்று மக்களை சிந்திக்க வைக்கிறது. மேலும், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வு, தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிப்பு போன்றவற்றில் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிப்பு விளம்பரம் படித்தவர்களை ஈர்த்துள்ளது. பத்திரிக்கைகளீல் வந்த விளம்பரங்களில் அதிமுக விளம்பரத்தை திமுக காலி செய்துள்ளது.
அதிமுக விளம்பரம் திமுக மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்தது, அராஜகம் செய்வது போன்ற கருத்துகளால் மக்களை கவர்கிறது.
அதிமுக சொல்லும் பல விடயங்கள் சரி என்று மக்கள் உணர்ந்தாலும், பாஜகவுடனான கூட்டு காரணமாக அந்த விளம்பரங்கள் பலனின்றி போகின்றன.
பாஜக பொது நல சிந்தனை, பெண்கள் பாதுகாப்பு என்ற தீம்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதை மக்கள் வக்கிர நகைச்சுவையாகவே பார்க்கின்றனர். மநீம, அமமுக, பச்சை முத்து கட்சி விளம்பரங்கள் எடுபடவில்லை. அமமுகவின் கிளாஸ் லீடர் விளம்பரம் ஒரு நகைச்சுவை துணுக்கின் ரசனையை கொண்டுள்ளது. நாம் தமிழர் கட்சியில் அதிக விளம்பரமில்லை. சீமான் பேச்சே விளம்பரமாக இருக்கிறது.
கூட்டி கழித்துப் பார்த்தால் அதிமுக, திமுக விளம்பரங்கள் மட்டுமே மக்கள் மனம் வரை சென்றுள்ளன. அவை எப்படி வெளிப்படுகின்றன என்பதை தேர்தலுக்கு பின்பு தான் தெரிந்துகொள்ள முடியும்.















