2 தொகுதி முடிவுகள் : அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?

0
350

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து
உள்ளது. இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவையில் தற்போது அதிமுகவின் பலம் பேரவைத் தலைவரை தவிர்த்து 122 ஆகும். விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வென்றால் அதன் பலம் 124 ஆக உயரும். பேரவையில் திமுகவுக்கு தற்போது 100 உறுப்பினர்கள் உள்ளனர்.

காங்கிரசுக்கு 7 உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் அந்த கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் திமுகவின் பலம் 101 ஆகவும் காங்கிரசின் பலம் 8 ஆகவும் உயரும் . இவர்களை தவிர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் ஒருவரும் சுயேச்சை உறுப்பினர் டிடிவி.தினகரனும் உள்ளனர்.

இந்த தேர்தல் முடிவுகளினால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here