பொருளாதார நெருக்கடி காரணமாக வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், ஆப்பிள் பேஸ்டைம் ஆகியவற்றை பயன்படுத்திப்பேசக்கூடிய அழைப்புகளுக்கு வரி விதிக்க லெபனான் அரசு முடிவு செய்தது. ஒவ்வொரு அழைப்புக்கும் 0.20 டாலர் (ரூ.14) வரி விதிப்பதாக அறிவித்தது.
இதையடுத்து அங்கு கடுமையான போராட்டம் வெடித்தது. மக்களின் எதிர்ப்பால் சேவை வரியை அரசு ரத்து செய்தது. ஆனாலும், ஆட்சியாளர்கள் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீண்டு போராட்டம் நடக்கிறது.















