குறிஞ்சிப்பாடியில் உள்ள உத்திரபதி என்பவர் வீட்டிலிருந்து பாட்டில்கள் வெளீயே அனுப்பப்படுவதாக சந்தேகத்துக்கிடமான தகவல் போலீசாருக்கு சென்றது. உடனடியாக போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு 2000 பாட்டில்களில் மது நிரப்பப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்களை அதட்டிக்கேட்டதில், சானிடைசரை வைத்து சரக்கை வடிகட்டியதாக கூறினர். இது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஆபத்தான சரக்கு என்பதால் உடனடியாக அதை கைப்பற்றி, அங்கிருந்த 9 பேரையும் கைது செய்தனர்.