ஆசாத் காஷ்மீரில் உள்ள நியூ மீர்பூர் பகுதி அருகே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் வடபகுதியில் பல்வேறு நகரங்கள் குலுங்கின. சில வீடுகள் இடிந்து விழுந்தன. அந்த பகுதியில் உள்ள மசூதி ஒன்றும் சேதமடைந்தது.
இதனால் மருத்துவமனைகளில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. பல வாகனங்கள் சாலைகளில் ஏற்பட்ட வெடிப்புகளுக்குள் விழுந்தன. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அச்ச உணர்வால் கட்டிடத்தில் இருந்து பொதுமக்கள் தப்பியோடினர். ஜீலம் கால்வாய் சேதமடைந்தது. அதில் இருந்து நீரானது பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்தது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.