பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
மாநில தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களாக சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு மேல் பணி செய்த ஐஜி முருகனை, மனைவி போட்டியிடும் மாவட்டத்திலிருந்து தொலைவாக கூடுதல் உதவி கமிஷனர் வெள்ளத்துரையை இடமாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், எஸ்பிக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி ராஜேஷ்தாசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி, சிபிசிஐடி விசாரணை அடிப்படையில் பெண் மானபங்கம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.












