உடுமலைப்பேட்டை தொகுதியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். விஐபி தொகுதி என்பதால் கரன்சி ஆறாக பாய்கிறது.
இந்நிலையில், பெதம்பம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் அமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி படங்கள் போட்ட பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சேலை உள்ளிட்ட பல பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்க வசதியாக அங்கு பதுக்கப்பட்டிருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது.














