கோவில்பட்டி தங்கப்பநகரை சேர்ந்த
இளங்கோவன் மனைவி
கற்பகம் வயது33
அவரது மகள். தர்ஷினி வயது 7. இருவரும் இன்று இரவு 9 மணியளவில் கடலையூர் ரோடு ஹோட்டலில் கிரேவி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருபோது வயிறு எரிச்சல் ஏற்பட்டுள்ளது
உடனே கடலை யூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தியிருக்கிறார்கள் உடனே இருவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது

உடனே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்பு நிலைமை மோசமடைந்தது மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி கொண்டுசெல்ல இருக்கும்பொழுது ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது அந்நிலையில் தாயும் மகளும் இறந்து போனார்கள்.
இந்த செய்தியை கண்டவுடன் தங்கப்பன் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆஸ்பத்திரியின் முன்பு கூடி இருந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது
கற்பகத்துக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.