கோவை சிங்கா நல்லூரை அடுத்த எஸ் ஐ எச் எஸ் காலனி இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் சக்தி மனைவி மணிமேகலை (38). இவர் தனது கணவர் சக்தியை பிரிந்து
பிரபு என்பவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். பிரபு கால் டாக்சி நிறுவனம் நடத்திவருகிறார்.
நேற்று மதியம் மணிமேகலையின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை குமார் என்ற நபர் வந்து கழுவிக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிந்து என்கிற பெண்மணிமேகலையிடம் சேலை வாங்குவதற்காக வந்து பேசிக் கொண்டிருந்தார். பிரபுவும் வீட்டில் இருந்தார்.
அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த 4 பேர் கும்பல் மணிமேகலையிடம் ‘உங்களைப் பற்றி எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும்’ என்று கூறி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து மணிமேகலைககும் மர்ம கும்பலை சேர்ந்த 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் மணிமேகலையை தாக்கத் துவங்கினர் .
மணிமேகலையின் சத்தம் கேட்ட பிரபு மற்றும் குமார் ஆகியோர் மணிமேகலை மீது நடந்த தாக்குதலை தடுக்க முயன்றனர். ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடுமையாக மணிமேகலை, குமார், பிரபு ஆகியோரை தாக்கியதோடு அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
காயமடைந்த மணிமேகலை ,குமார், பிரபு ஆகியோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து மணிமேகலை சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பெயரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














