தூத்துக்குடியில் கொரோனாவை பரப்பும் அமைச்சர், கலெக்டர்

0
2939

கொரானோ வைரசின் கோரப்பிடியில் குவலயமே கதி கலங்கிக்கொண்டிருக்கிறது. தயவு செய்து தனித்திருங்கள் என்று பிரதமர் கைகூப்பி வேண்டுகிறார். வெளியில் வந்தால் சட்டம் பாயும் என்று முதல்வரும் சுகாதார அமைச்சரும் எச்சரிக்கின்றனர். 144 தடையுத்தரவு பிறப்பித்து தனியாக வெளியில் வந்தாலே போலீசார் தடியடி நடத்துகின்றனர்.
இந்நிலையில், விளம்பர மோகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவும், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் நூற்றுக்கணக்கானோரை கூட்டி முக கவசம் வழங்கும் விழா நடத்தி கொரோனாவை விருந்து வைத்து அழைக்கின்றனர்.
ஒரு விழாவல்ல, இரு விழாவல்ல, 3 விழாக்கள் தூத்துக்குடியை சுற்றி நடந்திருக்கின்றன. உச்சகட்டமாக தூத்துக்குடியில் ஆளுங்கட்சி பிரமுகர் நடத்திய தனிப்பட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட அதிமுக செயலாளர் தோரணையில் கலந்துகொண்டு முக கவசம் வழங்கியுள்ளார். இந்த விழாவில் இருநூற்றுக்கு மேற்பட்ட மக்கள் மணிக்கணக்கில் கூடி நின்றனர்.
ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பற்றிய விவரத்தை விசாரித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த விழாக்களில் அத்தகையோர் கூடியிருக்க கூடும் என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.
அமைச்சர் மற்றும் கலெக்டரை தனிமைப்படுத்தி கொரொனோ சோதனை நடத்தப்படுமா? சட்டத்தை பேணவேண்டிய உயரிய இடத்தில் இருந்துகொண்டு சட்டத்தை மீறி நிகழ்ச்சிகள் நடத்திய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here