காதலை ஏற்காததால் மலையில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

0
306

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சமணப்படுகை பகுதியில் வாலிபர் ஒருவர் இரத்தகரையுடன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் மதுரை டவுன் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் இறந்த வாலிபரின் உடலை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டி முதல் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் ஜோதி மகாலிங்கம் (23) எனவும், என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்து சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பணிபுரிந்து வருகிறார். சென்னையில் பணிபுரிந்த நிறுவனத்தில் ஒருதலைபட்சமாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் எனவும் தெரியவந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுரை வந்த ஜோதி மகாலிங்கம் தான் காதலித்த பெண்ணிடம் தனது காதலை கூறிய நிலையில், அப்பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் கடந்த சில வாரங்களாகவே மன விரக்தியில் இருந்த ஜோதி மகாலிங்கம் நேற்று முன்தினம் வீட்டில் பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து ஜோதி மகாலிங்கத்தின் தந்தை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் தனது மகன் காணாமல் போனதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பல இடங்களில் அவரை தேடி வந்த நிலையில் இவ்வாறு மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here