தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அண்ணா நகர் பகுதியில் நெல்லை – திருச்செந்தூர் சாலையில் மெயின் ரோட்டை கடந்து மாடுகள் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லை நோக்கி வந்த டேங்கர் லாரி ஒன்று மாடுகள் சென்ற கூட்டத்தில் திடீரென மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை ஓரத்தில் நின்ற மின்விளக்கில் மோதி நின்றது. இந்த விபத்து குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









