புகழ்பெற்ற நீல்சன் ஊடக நிறுவனமும், டைனிக் பாஸ்கர் இந்தி நாளிதழும் நாடு முழுவதும் கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளன.
பிப்ரவரி 15 முதல் மார்ச் 28 வரை, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட
25,000 பங்கேற்பாளர்களுடன் இந்த விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கருத்துக்கணிப்பின்படி, நாடுமுழுவதுமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி 326 இடங்களையும், பாஜகவின் கூட்டணி 194 இடங்களையும், மற்றையவை 23 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றியை நோக்கி செல்கிறது.
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெரும்பான்மை இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூர், திரிபுரா, அசாம், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 வட மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் உள்ள 134 தொகுதிகளில், ‘இந்தியா’ கூட்டணி 128 இடங்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் உணர்வு காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது.
பீகாரில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில், ‘இந்தியா’ கூட்டணிக்கு 34 இடங்களும், ‘என்.டி.ஏ’ கூட்டணிக்கு 6 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெறும் என சர்வே கணித்துள்ளது.
பின்னடைவை சந்திக்கும் பாஜக: ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜு ஜனதா தளம் பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர மறுத்துவிட்டது. அதேபோல், பஞ்சாபிலும் அகாலிதளம் பா.ஜ.க.வுடன் உறவை முறித்துக்கொண்டது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக வளர்ந்து வரும் அதிருப்தியையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. மேற்கு வங்கத்தில், 42 மக்களவைத் தொகுதிகளில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 35 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
. பாஜகவுக்கு 3 இடங்களும், காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் உள்ள 80 இடங்களில், ‘என்.டி.ஏ’ கூட்டணிக்கு 58 இடங்களும், ‘இந்தியா’ கூட்டணிக்கு 22 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 39 இடங்களைக் கைப்பற்றும் என்றும், ‘என்.டி.ஏ.
9 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.










