விஜயபாஸ்கர் கார் விபத்து – கடம்பூர் ராஜு மயக்கம்

0
2612

இன்று நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில்  அமைச்சர்களின் அதிரடி பிரச்சாரத்துக்கிடையே நடந்த இரு எதிர்பாராத சம்பவங்கள் அதிமுகவினரை அப்செட் ஆக்கியுள்ளன. களக்காடு பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் விபத்தில் சிக்கியது. சாலையில் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் கார் மோதியது. இதில் பைக்கில் சென்ற இளைஞருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.ஆனாலும், அமைச்சரின் பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டது.

முன்னதாக, இதே களக்காடு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர்ராஜு மயக்கமானதால் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இந்த மயக்கமாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here