பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது

0
514

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தஉத்தண்டராஜ் மனைவி செல்வராதிகா ஸ்ரீ (23) கடந்த 3ஆம்தேதி தனியாக சென்ற போது , அவரது கழுத்தில் கிடந்த 7 சவரன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பறித்துவிட்டு தப்பினர்.

அவர்களை பிடிக்க, கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் அய்யப்பன், கயத்தாறு ஆய்வாளர் முத்து ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை தனிப்டையினர் ஆய்வு செய்தபோது, பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பொன்ராஜ் மகன் முருகபெருமாள் (எ) விக்கி (23), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் சபரிமணி (21) , அச்சங்குளம் தீத்தாம்பட்டியை சேர்ந்த மூக்கையா மகன் சிவசுப்பிரமணியன் (26) ஆகியோர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான 7 பவுன் நகை கைப்பற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here