அருண் ஜெட்லி மரணம்

0
670

கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாஜக முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி இன்று பகல் 12 மணியளவில் இறந்தார்.
67 வயதான அருண் ஜெட்லி 2014ல் மோடி அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். மன்மோகன் சிங் ஆட்சியின்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். வாஜ்பாய் காலத்தில் சட்ட அமைச்சராக இருந்தார். 2014 முதல் நிதியமைச்சராக இருந்தார்.

கல்லூரி காலத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டார். 1974ல் ஏபிவிபியில் இருந்தார். 1980ல் பாஜகவில் சேர்ந்தார். உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர். போபர்ஸ் வழக்கில் வாதாடியவர். பெப்சி, கோகோ கோலா சட்ட ஆலோசகராக இருந்தவர்.

கிரிக்கெட் ஆர்வலர். பிசிசிஐ தலைவராக இருந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here