தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தேர்க்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் கருப்பசாமி. இவர் கருங்கடல் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். அவருடைய உறவினர் சொல்விளங்கும் பெருமாள். கருப்பசாமியின் உறவினர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே இவர்கள் இருவரும் திருநெல்வேலிக்குச் சென்று பார்த்து இருசக்கர வாகனத்தில் விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணல்விளை பகுதியில் வந்து கொண்டிருந்த போது கல்குவாரிக்குச் சென்ற கனரக லாரி இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் இவர்கள் மீது மோதிய லாரி நிற்காமல் நின்றது.
அப்போது அங்கு நின்ற சிலர் லாரியை விரட்டிச் சென்றுள்ளனர். இதை பார்த்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடிதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அங்கு வந்த போலீசார் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கிளாக்குளத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கு சென்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
ஆத்திரத்தில் அங்கு வந்த சிலர் லாரியின் கண்ணாடியை உடைத்தாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோதிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.















