வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் வெறும் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் வேட்பாளராக களமிறங்கிய ஏ.சி.சண்முகம் 3 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இம்முறை அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட்டதால் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இந்தத் தோல்வி அதிமுகவினரை மட்டுமல்ல, பாஜகவினருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ஏ.சி.சண்முகம் செல்வாக்குள்ள மனிதர் என்பதையும் உணர்ந்து கொண்ட பாஜக அவரை தேற்றும் வகையில் அவரை கர்நாடாக மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது














