மருத்துவ படிப்பு உள் ஒதுக்கீடு ஆளுநர் அவகாசம் திமுக போராட்டம்

0
689


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி அனுமதியில் 7.5{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} இட ஒதுக்கீடு வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் கவர்னர் முடிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால், அதன் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்ததால் விரைந்து முடிவெடுக்க கோரி சென்னைை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. த்்் முதல்வர் உத்தரவின்் பெயரில் மூத்த அமைச்சர்கள்5 பேர் சென்று கவர்னரை

சந்தித்து வலியுறுத்தினர். திமுக தலைவர் முக ஸ்டாலினும் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு பதிலளித்த கவர்னர், அவருக்கு 3 முதல் 4 வாரங்கள் வரை அவகாசம் தேவை என்றும், தீர்மானம் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்துவருவதாகவும், இது குறித்து அமைச்சர்களிடம் தெரிவித்ததாகவும் முக ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உண்மையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாத அதிருப்தியில் கிராமப்புற மாணவர்களின் இந்த ஒதுக் கீட்டு உரிமை கிடப்பில் போடப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் உலவுகிறது. 10{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} க்கு ஒப்புக்கொள், 7.5,{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}ஐ பெற்றுக்கொள் என்பதே பேரமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டின் சூழலை எண்ணி அதிமுக அரசு மறுப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்த ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளும்் கட்சியுடன் சேர்ந்துுு போராட தயாராக இருப்பதாக ஸ்டாலின் அறிவித்தும் அதிமுக தயங்குவதால், வரும் 24ஆம்தேதி (நாளை மறுநாள்) கவர்னர்் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here