முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
மதுரையில் உள்ள 12 அம்மா உணவங்களில் பணிபுரியும் அம்மா உணவக பெண் ஊழியர்களுக்கு ஜீன் மாதத்திலிருந்து தற்போது வரை சம்பளம் வழங்கப்படாததால் நீண்ட வேதனையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றது. தீபாவளி திருநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்பது உணவக தொழிலாளர்களை பெரிதும் வேதனைக்குள்ளாகியுள்ளது.
எனவே, அந்தந்த மாதங்களிலேயே நிலுவையில்லாமல் அம்மா உணவக பணியாளர்களுக்கு சம்பளம் கிடைத்திட உத்தரவிட்டு ஏழை எளியமக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் தொடர்ந்து உணவு வழங்கி வருவதை உறுதி செய்திட தக்க எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.