கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றி வருபவா் பாா்த்திபன் (57). இவா் சிங்காநல்லூரில் மனைவி, குழந்தைளுடன் வசித்து வருகிறாா்.
இவரது உறவினா் வரதராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அபிநயா (40). இவா், கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
அபிநயா வின் விவாகரத்து வழக்கை பார்த்திபனின் சகோதரர்
நடத்தி வருகிறார். இதற்காக வரும் சமயத்தில் பார்திபணுக்கும் அபிநயா விற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதல் ஆக மாறி உள்ளது.
அபிநயா வீட்டிற்க்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் 2 லட்ச ரூபாய்க்கு பார்த்திபன் வாங்கி கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாள்கள் முன்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், பாா்த்திபன், அபிநயாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, சிங்காநல்லூா் உழவா் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த அபிநயாவின் தந்தையின் இருசக்கர வாகனத்தை, பாா்த்திபன் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, அபிநயா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர்.அதில் பார்த்திபன் அபிநயா வை தாக்கி அவரது தந்தையின் பைக்கை தீ வைத்து எரித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து எஸ்.ஐ., பாா்த்திபனை போலிசார் கைது செய்தனா்.













