தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28,978 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானார்கள். 232 பேர் மரணமடைந்தனர். 20,904 பேர் குணமடைந்து திரும்பினர்.
இந்திய அளவில் 3,493 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகினர். கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 39,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஒன்றிய அளவில் கொரோனா பாதிப்பின் முதல் மாநிலமாக மாறியது. அங்கு 596 பேர் ஒருநாளில் இறந்தனர்.
இந்தியாவில் 17.01 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தடுப்பு நடவடிக்கை மந்தமாக இருப்பதாலேயே கொரோனா தாக்கம் அதிகரித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் நோய் தடுப்பில் மரபார்ந்த மருத்துவம் முக்கியத்துவம் வகிக்கிறது. நச்சு காய்ச்சலை முறியடிக்கும் குடிநீர் சித்த மருத்துவத்தில் இருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால் கபசுர குடிநீர் குதலியவற்றை முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடாத மக்களுக்கு தொடர்ந்து விநியோகிக்க வேண்டும். தடுப்பூசி பற்றிய தயக்கத்தை தக்க விளக்கங்களுடன் போக்கி நம் சீதோஷ்ணத்துக்கு, உடல் நிலைக்கு தகுந்த தடுப்பூசியை தேர்ந்தெடுத்து யாவருக்கும் செலுத்தவேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
எனவே, கொரோனா தடுப்பு பற்றி விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குடியரசு தலைவருக்கு மனு அளித்துள்ளது.














