நெல்லைஅருகே திருக்குறள் ஓதி திருமணம் முடித்து அறிவுத் திருக்கோயில் சென்ற மணமக்கள்

0
807

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இன்று காலை அவ்வூரைச் சேர்ந்த விசயராகவனுக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபிகாவுக்கும் , திருக்குறள் வழியில் தமிழறிஞர் குமாரசுப்பிரமணியம் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நிகழ்ந்த உடன் மணமக்கள் விசயராகவன் தீபிகா இருவரும் சேர்ந்து திருமணக் கோலத்துடன் சென்ற முதல் இடம் அறிவுத் திருக்கோயிலான வீரவநல்லூர் கிளை நூலகம்தான்.

அங்கு, அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மணமக்கள் நூலக உறுப்பினர் சந்தா கட்டி மகிழ்ந்தனர். வீரவநல்லூர் வாசகர் வட்டத்தின் சார்பில் தலைவர் ஆதம் இல்யாஸ் செயலாளர் நன்னூலகர் சந்திரசேகரன் இணைச்செயலாளர் இணைச்செயலாளர்கள் எஸ்.பி.இராமன் , மரகதராஜ், பெரியார் செல்வம் , துணைத்தலைவர் சந்தனக் குமார் , பொருளாளர் பெரியார் பித்தன் , செயற்குழு உறுப்பினர்கள் சு. கிருஷ்ணன், சீ.இசக்கி சரவணன் , முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் நவநீதன் , மக்கள் தொண்டர் இரா . பழனி ஆகியோரால் மகிழ்ச்சியான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த அறிவு முறை திருமணத்திற்கு மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் பொ. வள்ளிநாயகம் ஒருங்கிணைத்தார். பாப்பாக்குடி பைந்தமிழ் பேரவை சார்பில் பாப்பாக்குடி முருகன் வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக இத்திருமணத்திற்கு முதல்வர் மு. க .ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

மணக்கோலத்துடன் நூலகம் சென்ற மணமக்களை உள்ளூர் மக்கள் வியந்து பாராட்டி னர் .

. இந்த திருக்குறள் திருமண நிகழ்வினை மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் பொ. வள்ளிநாயகம் ஒருங்கிணைத்தார். பாப்பாக்குடி பைந்தமிழ் பேரவை சார்பில் பாப்பாக்குடி முருகன் வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக இத்திருமணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

மணக்கோலத்துடன் நூலகம் சென்ற மணமக்களை உள்ளூர் மக்கள் வியந்து பாராட்டி னர் . .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here