இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் யாதவ் கடந்த 2016 மார்ச் 7ல் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டார். உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு 2017ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையீடு செய்தது. மரண தன்டனையை மறு ஆய்வு செய்யவேண்டும். தூதரக உதவி கிடைக்க வகை செய்யவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் ஆணையிட்டது. இதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான், குல்பூஷனை இந்திய தூதரக அதிகாரி சந்திக்கும்போது தம் நாட்டு அதிகாரியும் உடனிருப்பார் என நிபந்தனை விதித்தது. மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு நிபந்தனையை தளரச்செய்தது இந்தியா.
இதன் அடிப்படையில் இந்திய தூதரக அதிகாரி கௌரவ் அலுவாலியா குல்பூஷன் யாதவை சந்திக்கவுள்ளார். ‘ சர்வதேச நீதிமன்ற உத்தரவுப்படி சுமூகமான சூழலை பாகிஸ்தான் அரசு உருவாக்கும்’ என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.














