தெய்வீக சேவைக்கு இவ்வளவுதான் சம்பளமா? நீதிபதிகள் அதிருப்தி

0
735

கடந்த வாரம் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். அதில், நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் நியமனம், மருத்துவ கல்வி இடஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் இருந்தாலும் ஊதிய உயர்வு கோரிக்கையை மட்டும் எடுத்துக்கூறி முதலமைச்சரும் சுகாதார அமைச்சரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் கோரிக்கையை சூ மோட்டோவாக வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக்கொண்டது. இதுகுறித்த விசாரணையில் நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘ மருத்துவர்களுக்கு 57,000 தன சம்பளமா? ஆசிரியர்கள், நீதிபதிகளின் உதவியாளர்கள் கூட இதற்கு மேல் வாங்குகின்றனரே, தெய்வீக சேவைக்கு இவ்வளவுதான் சம்பளமா? என்று தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அரசு தரப்பில் விளக்கம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here