தமிழகத்தில் குடியேறிய சில நாட்களிலேயே கொரோனா தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. தற்போது அது செக்சன் செக்சன் ஆக சுற்றி வருவதால் ஊழியர்கள் பீதியில் உறைந்திருக்கின்றனர்.
தொடக்க நாட்களில் பேரிடர் தடுப்பு பிரிவில் ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டார். ஆனாலும் அந்த பிரிவு மூடப்படவில்லை. தற்போது மீண்டும் அங்கு கொரோனா நுழைந்ததால் அந்த பிரிவே கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டி பிரிவு ஊழியர் ஒருவர் கொரோனாவால் தாக்கப்பட்ட அந்த பிரிவும் மூடப்பட்டது. தற்போது ஏ பிரிவில் சகோதரி ஒருவர் மூலம் கொறொனா அச்சத்துக்கு ஆளாகியுள்ள பெண் ஊழியரால் அந்த பிரிவும் அடைக்கப்பட்டது.
மேலும் எம் பிரிவிலும் இ பிரிவிலும் ஜமாபந்தி க்கு போய்வந்த ஊழியர்களால் கொரோணா அச்சம் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடி கலெக்டரை பொருத்தவரை இளமைத் துடிப்பு மிக்கவர். அதனால் எதையும் சட்டை செய்யாது பல்வேறு நிகழ்ச்சிக ளில் தொடர்ச்சியாக பங்கேற் கிறார். மாவட்ட அமைச்சரோடு வேறு அவ்வப்போது மக்கள் திரளும் விழாக்களில் தலை காட்டுகிறார்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்படும் களேபரம் கலெக்டர் காதிலோ மாவட்ட அமைச்சர் காதிலோ இன்னும் ஏறவில்லை.
கலெக்டர் அலுவலகத்தில் குறைந்த எண்ணிக்கையில் இயங்கத் தகுந்த பிரிவுகளில் ஊழியர்களை குறைத்து இயக்கலாம். வளாகத்திற்குள் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யலாம். ஏதாவது நடவடிக்கை எடுத்து கொரோனாா அச்சத்தை போக்க வேண்டும் என்று அப்பாவி ஊழியர்கள் அலமரிக்கிறார்கள்.












