அசாம் மாநிலத்தில் ஜோர்கட் என்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அப்போது மருத்துவரோ, போதிய பணியாளர்களோ இல்லை. ஒருபணியாளர் குளுக்கோஸ் ஏற்றியுள்ளார்.ஆனால், சிகிச்சை பலனின்றி தொழிலாளி இறந்தார்.
அப்போது பணிக்கு வந்த மருத்துவர் தெவன் தத்தாவை சக தொழிலாளர்கள் கடுமையாக தாக்கினர். ஓய்வு பெற்ற மருத்துவரான தெவன் தத்தாவை அம்மருத்துவமனையில் பொறுப்பு மருத்துவர் இல்லாததால் சேவை செய்துவந்துள்ளார். அவரை அறையொன்றில் அடைத்து கண்ணாடியால் கீறியுள்ளனர். இதில் 73 வயதான மருத்துவர் தேவ் குப்தா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.













