கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த நாசர் பாஷா என்பவரின் மனைவி பெனாசிர்(26). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாசர் பாஷாவிற்கு குனியமுத்தூர் பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அவரது மனைவி பெனாசீர் கணவரை விட்டுப் பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார் .
இந்நிலையில் நேற்று இரவு நாசர் பாஷா பெனாசிர் வீட்டிற்கு வந்தார். அப்போது தனக்கு தலாக் சொல்லி விவாகரத்து தர வேண்டும் என்று கூறியுள்ளார் .அதற்கு பெனசர் மறுத்துள்ளார் இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது அப்போது பெனாசிர் தம்பி குறுக்கிட்டு சண்டையை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் நாசர் பாஷா மறைத்து வைத்திருந்த கத்தியால் பெனாசிர் மற்றும் அவரது தம்பியை குத்தினார் .இதில் பெனசிர் மற்றும் அவரது தம்பிக்கு தலையில் கத்திக்குத்து பட்டு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து பெனாசிர் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.