கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை உடைந்து விழுந்தது – 2 பெண்கள் காயம்

0
757


கோவை காந்திபுரம் பகுதியில் கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்கான நகர பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம் .இங்கு பயணிகள் அமர்வதற்கு அமர்வு இடம் உள்ளது.

கடந்த சில வாரங்களாக கோவையில் கனமழை பெய்து வருகிறது .இதன் காரணமாக கட்டிடங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு அமைக்கப்பட்டுள்ள ஓய்வெடுக்கும் இடத்தின் மேற்பகுதியிலும் மழையால் தண்ணீர் தேங்கியிருந்தது.

இதன்கரணமாக சுவற்றில் நீர் இறங்கி
இருந்தது. இந்நிலையில் இன்று காலை பேருந்துக்காக அங்கு ஆண்கள் பெண்கள் உட்பட பலர் காத்திருந்தனர் .அப்போது திடீரென பயணிகள் ஓய்வு எடுக்கும் இடத்தில் உள்ள மேற்கூரையின் சுவர் உடைந்து விழுந்தது. இதில் அங்கு அமர்ந்து கொண்டிருந்த கல்லூரி மாணவி மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு தலையில் கட்டிட இடிபாடுகள் விழுந்தது.

இதில் அவர்கள் இருவருக்கும் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து தலையில் லேசாக காயம்பட்ட பெண்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here